/* */

கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கிராம சபா கூட்டம்

கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கிராம சபா கூட்டம்
X

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், திப்பனப்பள்ளி ஊராட்சி, கும்மனுார் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு முன்னிலையில் இன்று (02.10.2023) நடைபெற்றது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு, நமது மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளில் இன்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும், ஊரகப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல் குறித்தும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், துாய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், 2022-2023 கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மக்கள் திட்டமிடல் இயக்கம், காசநோய் இல்லா கிராம ஊராட்சி குறித்து விவாதிக்கப்பட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அனைவருக்கும் 100 நாள் வேலை உறுதி செய்ய வேண்டும். அதற்கான ஊதியம் உரிய நேரத்தில் வங்கிகள் மூலம் அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். சுத்தமான, சுகாதாரமான குடிநீர் அனைவருக்கும் வழங்கவும், பருவமழை காலத்தில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலை முற்றிலும் தவிர்க்க அனைத்து வீடுகளையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக நீர் தொட்டிகள் குளோரின் கொண்டு சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏ.டி.எஸ். வகை கொசுகள் சுத்தமான நீரில் தான் வளர்கிறது. ஆகவே தண்ணீர் தொட்டிகள், பாத்திரங்கள் மூடியநிலையிலேயே வைக்க வேண்டும். வீடுகளை சுற்றி மழைநீர் தேங்காதவாறு சுத்தப்படுத்த வேண்டும். காய்ச்சல் அறிகுறி இருந்தால் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இப்பகுதியில் தரைபாலம், பள்ளி சுற்றுசுவர், தனிநபர் வீட்டுமனை பட்டா, உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்துள்ளீர்கள். கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக சிறப்பு கிராம சபை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறை நவீன எல்.இ.டி. வாகனம் மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உரை ஒளிப்பரப்பு செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பொதுமக்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம், சிறுதானிய கண்காட்சியை பார்வையிட்டார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அயோடின் உப்பு பயன்பாடு குறித்த உறுதிமொழியை பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சிகளில், இணை இயக்குநர் (வேளாண்மை) கிருஷ்ணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மகாதேவன், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ரகுகுமார், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயற்பொறியாளர் சிவமுருகன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன், துணை இயக்குநர் (கால்நடைபராமரிப்பு) மரு.மரியசுந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், திரு.ராஜேஸ், வட்டாட்சியர் விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி கிருஷ்ணன், துணை தலைவர் திரிவேணிசெல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் வள்ளிரமேஷ், வருவாய் ஆய்வாளர் ரமாதேவி, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, சுகாதார துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Updated On: 2 Oct 2023 5:17 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...