பர்கூர் அருகே இருசக்கர வாகன ஓட்டியிடம் வழிப்பறி: இருவர் கைது

பர்கூர் அருகே இருசக்கர வாகன ஓட்டியிடம் வழிப்பறி: இருவர் கைது
X

பைல் படம்.

பர்கூர் அருகே இருசக்கர வாகன ஓட்டியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதேப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் நேற்றும் காலை சுமார் 05.30 மணிக்கு பர்கூரிலிருந்து கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை செட்டிபள்ளி பிரிவு ரோடு விநாயகா பேக்கரி முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது இரண்டு நபர்கள் திடீரென வழிமறித்து வண்டியை நிறுத்தி கத்தியை காட்டி பாக்கெட்டில் இருந்த பணம் ரூ.500/-யை பறித்துக்கொண்டு சென்றனர். பின்னர், மணி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வழிபறியில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story