சொட்டுநீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
சொட்டுநீர் பாசனம் குறித்து விவ்சாயிகளுக்கு நடைபெற்ற பயறிசி முகாம்
தற்போது உள்ள சூழ்நிலையில் பயிர்களுக்கு தண்ணீர் விடுதல் என்பது மிகவும் சிரமாக உள்ளது. தண்ணீர் பற்றாக்குறையினாலும், பருவ நிலை மாற்றங்களாலும் இந்த நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு சொட்டு நீர் பாசனம் ஒரு சிறந்த வழிமுறையாகும்.
சொட்டு நீர் பாசனம் மூலம் குறைந்த நீரைக்கொண்டு அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்யலாம். இந்த நீர் பாசனம் மூலம் 75% நீரை சேமிக்கலாம். மேலும் சாகுபடி செலவு குறைந்து அதிக வருமானம் பெற முடியும். பயிர் திடமாகவும், ஆரோக்கியமாகவும் வளர்வதோடு, வேகமாக முதிர்ச்சி அடையும்.
தண்ணீரில் கரையும் உரங்களை நேரடியாகப் பயிருக்கு வேர்ப் பகுதியிலேயே வழங்கலாம். களை எடுக்க வேண்டியதில்லை. ஆட்களுக்காக ஆகும் செலவும் குறைக்கப்படும். தரமான விளை பொருள்களுடன் அதிக விளைச்சல் கிடைக்கும்.
சொட்டு நீர் பாசனம் முறை:
சொட்டு நீர் பாசனம் இரண்டு விதமாக மேற்கொள்ளப்படுகிறது.
1. வெளிப்புறமாக குழாய்களைப் பதிப்பது
2. நிலத்துக்குக் கீழ் உட்புறமாக குழாய்களைப் பதிப்பது
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ், பைரமங்கலம் கிராமத்தில் சொட்டுநீர் பாசனம் மற்றும் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சி நடைபெற்றது.
இதில் கெலமங்கலம் வேளாண்மை உதவி இயக்குநர் கலா தலைமை தாங்கி, விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெறுவதன் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கினார். வேளாண் உதவி பொறியாளர் அக்பர் சொட்டுநீர் பாசன கருவிகள் பராமரிப்பு குறித்து எடுத்துரைத்தார்.
துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், மத்திய, மாநில அரசுகளின் வேளாண்துறை சார்ந்த மானிய திட்டம் மற்றும் பாரம்பரிய வேளாண்மை குறித்து விளக்கினார். உதவி வேளாண்மை அலுவலர் சுந்தர்ராஜ், கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், இடுபொருட்கள், உபகரணங்கள், பண்ணைக் கருவிகள் குறித்து விளக்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் கீதா, உழவன் செயலியின் அவசியம் குறித்து விளக்கினார்.
மேலும், கிசான் கடன் அட்டை குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu