தென்பெண்ணையில் மீண்டும் நச்சு நுரை: விவசாயிகள் கவலை

தென்பெண்ணையில் மீண்டும் நச்சு நுரை: விவசாயிகள் கவலை
X

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வரும் நுரை.

Krishnagiri News, Krishnagiri News Today - ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் நுரை வருவதால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Krishnagiri News, Krishnagiri News Today - ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் நுரை வருவதால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் நுரை வருவதால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆற்றங்கரையோரம் பயிரிடப்பட்டுள்ள கொத்தமல்லி தழை உள்ளிட்ட பயிர்கள் காற்றினால் வீசப்படும் நுரைகள் அவற்றின் மீது படும்போது வாடிவிடும். கர்நாடகாவை சேர்ந்த தொழிற்சாலைகள் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை தென்பெண்ணையில் விடுவதாக அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்,தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை வருவது தற்போது நிலவும் பிரச்னையாக உள்ளது. நதியை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீது கர்நாடக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையில், கிருஷ்ணகிரி கலெக்டர் தீபக் ஜேக்கப், சம்பவ இடத்தை பார்வையிட்டு, பரிசோதனைக்காக மாதிரிகளை சேகரிக்குமாறு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு (டிஎன்பிசிபி) அறிவுறுத்தினார். பெங்களூரைச் சேர்ந்த நிறுவனங்கள் மூலம் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. நிரந்தர தீர்வுகாண தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலையீட்டை நாடுவோம் என்று அவர் கூறினார்.

காவிரி, தென்பெண்ணை உள்ளிட்ட ஆறுகளில் கழிவுநீரை விடக் கூடாது என தமிழக தலைமைச் செயலாளர் வி.இறையன்பு கர்நாடகாவில் உள்ள தலைமைச் செயலாளருக்கு அண்மையில் கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!