கிருஷ்ணகிரி அருகே குடோனில் டைல்ஸ் திருடியவர் கைது

கிருஷ்ணகிரி அருகே குடோனில் டைல்ஸ் திருடியவர் கைது
X

போலீசார் வெளியிட்டுள்ள படம்.

கிருஷ்ணகிரி அருகே குடோனில் டைல்ஸ் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

கேஆர்பி அணை காவல் நிலையப் பகுதியில் பாலாஜ் என்பவர் தர்மபுரி -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஆதித்யா டைல்ஸ் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த 11.03.2022 ஆம் தேதி பாலாஜ் கடையின் உள்ளே இருந்தபோது கடையின் பின்பக்க குடோனில் வாகன சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது இரண்டு நபர்கள் நான்கு சக்கர வாகனத்தில் 15 டைல்ஸ் பாக்ஸ்களை திருடி டெம்போவில் ஏற்றி கொண்டு இருந்ததை பார்த்த பாலாஜி உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் டைல்ஸ் திருடிய இரண்டு நபர்களை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்