மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் 15 தேதி பதிவு செய்ய அழைப்பு

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் 15 தேதி பதிவு செய்ய அழைப்பு
X
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் 15 மற்றும் 16ம் தேதி பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்களை இரண்டாம் கட்டத்தில் உரிய தேதிகளில் பதிவு செய்ய இயலாதவர்கள்15.08.2023 மற்றும் 16.08.2023 ஆகிய தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் 1094 நியாயவிலை கடைகளில் உள்ள 5,64,264 குடும்ப அட்டைதாரர்கள் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக 584 கடைகளில் உள்ள 2,98,164 நபர்களுக்கு (முதல் நாள் ஒவ்வொரு பதிவு மையத்திலும் 60 நபர்களும் இரண்டாவது நாள் முதல் 80 நபர்கள் வீதம்) தேதி குறிப்பிட்டு விண்ணப்பங்கள் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டு 2,74,853 நபர்களுக்கு ஒப்புதல் ரசீது மற்றும் விண்ணப்பம் வழங்கப்பட்டு 823 விண்ணப்பப்பதிவு தன்னார்வளர்கள் மூலம் 28.07.2023 அன்று வரை 2,04,423 நபர்கள் பதிவு செய்துள்ளனர்.

மேலும் 24.07.2023 முதல் 02.08.2023 வரை டோக்கன் வழங்கப்பட்ட போது வீடு பூட்டி இருப்பதாலும், வெளியூர் சென்றுவிட்டதாலும் ஒப்புதல் ரசீது மற்றும் விண்ணப்பங்கள் பெறாத 23,311 நபர்களுக்கு மீண்டும் டோக்கன் வழங்கப்படும்.

மேற்கண்ட உரிய தேதிகளில் பதிவு செய்ய இயலாதவர்கள் மற்றும் விண்ணப்பம் பெறாதவர்கள் அனைவரும் 03.08.2023 மற்றும் 04.08.2023 ஆகிய தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம் என்பதை தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இரண்டாம் கட்டமாக மீதம் உள்ள 510 நியாயவிலை கடைகளில் உள்ள 2,66,460 குடும்ப அட்டைதாரர்களுக்கு 01.08.2023 முதல் 03.08.2023 வரை டோக்கன் வழங்கப்பட்டு 774 விண்ணப்பப்பதிவு தன்னார்வலர்கள் மூலம் 05.08.2023 முதல் 14.08.2023வரை விண்ணப்பப்பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் கட்டத்தில் உரிய தேதிகளில் பதிவு செய்ய இயலாதவர்கள்15.08.2023 மற்றும் 16.08.2023 ஆகிய தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அடுத்த புது மொபைல் வந்துருச்சு இத பாருங்க !!ரியல்மி 14X மொபைல் வரப்போகுது!