பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி: கிருஷ்ணகிரி ஆட்சியர்

பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய தாட்கோ கடனுதவி வழங்கப்படுவதாக கிருஷ்ணகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி: கிருஷ்ணகிரி ஆட்சியர்
X

பைல் படம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழக(தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்கள் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக அனைத்து மாவட்டங்களில் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்படி இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் உரிமையாளர் கட்டணம் (Franchise Fees) ரூ.2.00 இலட்சம் முற்றிலுமாக விலக்கும், விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5% வரை சிறப்பு தள்ளுபடியும், பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். மேலும், மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும். இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.

18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தொழிலுக்கு ரூ.6.50 இலட்சம் முதல் ரூ.7.50 இலட்சம் வரை திட்டத்தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30% அல்லது அதிகபட்சம் ரூ.2.25 இலட்சம் எனவும் பழங்குடியினருக்கு 50% அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5% முதல் 10% சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 20 Nov 2023 5:54 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    App Store Award 2023-யார் வெற்றியாளர்? ஆப்பிள்-ன் ஆப் ஸ்டோர்...
  2. வானிலை
    Tamil Nadu Rain Today-புயல் எச்சரிக்கை, கனமழையால் சென்னையில்...
  3. வணிகம்
    Day Trading Guide for Stock Market Today-இன்னிக்கு எந்த பங்கினை...
  4. உலகம்
    Malaysia Unveils Visa-Free Entry for Indians- டிசம்பர் 1 முதல் இந்திய...
  5. வழிகாட்டி
    Muyarchi Quotes in Tamil-முயற்சி இருந்தால் ஆமையும் வெல்லும்..!
  6. கல்வி
    Easy Thirukkural for Kids-குட்டீஸ்கள் ஈஸியா நினைவில் வைத்திருக்கும்...
  7. இந்தியா
    New Sim Card Rules in India-நாளை முதல் சிம் கார்டுக்கு புதிய...
  8. உலகம்
    ஒரே பாலின திருமணத்தை முறைப்படி பதிவு செய்து வரலாறு படைத்த நேபாளம்
  9. ஆன்மீகம்
    Palli Palan in Tamil-உங்களுக்கு பல்லி எங்கே விழுந்தது? பலன்...
  10. டாக்டர் சார்
    Loose Motion Meaning in Tamil-வயிற்றுப்போக்கு வந்தால்..என்ன