மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கெலமங்கலம் அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை நடத்திவரும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு துவக்க நிகழ்வு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. கெலமங்கலம் அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் சரவணன் துவக்கி வைத்தார்.
கல்லூரி இயந்திரவியல் துறை விரிவுரையாளர் சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கோவிந்தராஜன் தலைமையுரை வழங்கினார்.
நிகழ்வில் சாலைப் பாதுகாப்பு குறித்த விளக்கக் காட்சிகளுடன், மாணவ மாணவியர் தங்களுடைய இல்லத்தில் இருந்து கல்லூரி அடையும் வரை பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிகள் குறித்தும், வாகன உரிமம் இல்லாமல் வாகனம் இயக்கக் கூடாத காரணம் குறித்தும், தமிழ கத்தில் ஒரு வருடத்தில் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் அதை குறைப்ப தற்கான வழிகள் குறித்தும் தோழன் அமைப்பின் ஜெகதீஸ்வரன் விளக்கினார்.
விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக காக்கும், தமிழக அரசின் "நம்மை காக்கும் 48" திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. யாருக்கேனும் விபத்து நடந்தால் அந்த இடத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல்களையும், விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியவருக்கு கிடைக்க வேண்டிய உதவி குறித்தும், எவ்வாறு ஆம்புலன்ஸை அழைப்பது போன்ற விஷயங்களை தோழன் அமைப்பின் நந்தகுமார் விளக்கினார்.
அதைத் தொடர்ந்து கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்காக சாலைப் பாதுகாப்பு குறித்த கவிதை, ஓவியம் மற்றும் வாசகப் போட்டி நடத்தப்பட்டது. சிறப்பாக கவிதை, ஓவியம் மற்றும் வாசகங்கள் எழுதியவர்களுக்கும், நிகழ்ச்சி நடக்கும்போது கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் தெரிவித்த மாணவ மாணவிகளுக்கும் பரிசும், சான்றிதழும் வழங்கப் பட்டது.அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சாலைப் பாதுகாப்பு துண்டறிக்கை வழங்கப்பட்டது.
இறுதியில் தேன்கனிக்கோட்டை கட்டுமான மற்றும் பராமரிப்பு உதவிக் கோட்டப் பொறியாளர் திருமால் செல்வன் சாலைப் பாதுகாப்பு உறுதி மொழியை மாணவ, மாணவிகள் ஏற்கச் செய்தார். சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி வாசிக்க மற்ற மாணவ, மாணவிகளும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் தேன்கனிக் கோட்டை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு இளநிலைப் பொறியாளர் டேவிட், ராயக்கோட்டை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவிப் பொறியாளர் மன்னர் மன்னன், நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu