ஊரக வளர்ச்சித்துறை திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

ஊரக வளர்ச்சித்துறை திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
X

ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் 

கிருஷ்ணகிரி மாட்டத்தில் நடைபெறும் ஊரக வளர்ச்சித்துறை திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் சரயு தலைமையில் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் சரயு தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் 2022-2023 - ஆம் நிதியாண்டில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக 10 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம், பசுமை வீடுகள் திட்டம், சமத்துவபுரம், நீலப்புரட்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொகுதி - 2, பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் குழந்தை நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், பிரதான் மந்திரி ஆதர்ஸ் கிராம் யோஜனா திட்டம், ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் திட்டம், இருளர் மற்றும் மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் மேம்பாடு செய்தல், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடை பெற்று வரும் பணிகள், சமூக பொருளாதார மேம்பாட்டுத்திட்டம், தன்னிறைவு திட்டம், நமக்கு நாமே திட்டம், ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம், அனைத்து திட்ட சாலைகள் மற்றும் பாலங்கள் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ஆட்சியர் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளான சாலை அமைக்கும் பணிகள், சிறு பாலங்கள் கட்டுமான பணிகள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுமான பணிகள், குடிநீர் திட்ட பணிகள் மற்றும் தெரு விளக்கு போன்ற பொது மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்களை விரைந்து முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் உதவி திட்ட அலுவலர் அருள்மொழி தேவன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story