பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைக்கும் மாவட்ட ஆட்சிய சரயு, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அ.செல்லக்குமார் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்காக விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று 2,397.42 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் பாசனத்திற்காக தண்ணீரைமாவட்ட ஆட்சிய சரயு, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அ.செல்லக்குமார் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் இன்று (03.07.2023) திறந்து வைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
தமிழக முதல்வரின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்காக விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று 2,397.42 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 03.07.2023 முதல் 14.11.2023 வரை 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி, பாரூர் பெரிய ஏரியிலிருந்து 2023-2024 ஆம் ஆண்டு, முதல் போக பாசனத்திற்கு ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு 6.00 மி.க.அடி வீதம் 03.07.2023 முதல் 14.07.2023 வரை மொத்தம் 135 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு பிரதான கால்வாய் மூலம் வினாடிக்கு 50 கனஅடி வீதமும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் வினாடிக்கு 20 கனஅடி வீதம் என மொத்தம் வினாடிக்கு 70 கனஅடி வீதம் மூன்று நாட்கள் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டும், நான்கு நாட்கள் மதகை மூடி வைத்தும் முதல் போக பாசனத்திற்காக இன்று (03.07.2023) தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதன் மூலம் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள பாரூர், அரசம்பட்டி, பென்டரஅள்ளி, கோட்டப்பட்டி, கீழ்குப்பம், ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி ஆகிய 7 கிராமங்களைச் சார்ந்த நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கிழக்கு பிரதான கால்வாயின் மூலம் 1,583.75 ஏக்கர் நிலமும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் 813.67 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 2,397.42 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
எனவே, விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்றும், நீர் பங்கீட்டு பணிகளில் பொதுப்பணித்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும், அறிவிக்கப்பட்ட தேதிக்கு பிறகு எக்காரணத்தை கொண்டும் கால நீட்டிப்பு செய்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட இயலாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் மணிமேகலைநகராஜ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் குமார், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.டேவிட் டென்னிசன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர் காளிபிரியன்,போச்சம்பள்ளி வட்டாட்சியர் தேன்மொழி, நாகோஜனஹள்ளி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தமூர்த்தி, தமிழ்செல்வி சுந்தரமூர்த்தி, சண்முகானந்தம், ஒன்றிய குழு உறுப்பினர் பெரியசாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட விவசாய பெருமக்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu