நீர்பிடிப்பு நிலங்களின் ஆக்கிரமிப்புகளை மீட்க கோரிக்கை

நீர்பிடிப்பு நிலங்களின் ஆக்கிரமிப்புகளை மீட்க கோரிக்கை
X
கிருஷ்ணகிரி அருகே நீர்பிடிப்பு நிலங்களின் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் நீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது

போச்சம்பள்ளி அருகே உள்ள தாமோதரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

தாமோதரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சாதிநாயக்கன்பட்டி கிராம ஏரி, 36.6 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியின் நீர்ப்பிடிப்பு நிலங்களில் பலர் வீடுகள், மாட்டுக் கொட்டகைகள் கட்டியுள்ளனர். மேலும் இப்பகுதியில் பல சமூக விரோத செயல்களும் நடக்கின்றன.

ஏரியின் மொத்தப் பரப்பில் உள்ள நிலங்களில், சுமார், 10 ஏக்கர் வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இது குறித்து கிராமசபை கூட்டத்தில் மனு அளித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஏற்கனவே வடகிழக்கு பருவமழை குறைந்துள்ள நிலையில், நீர் பிடிப்புகளின் நிலப்பரப்புகள் ஆக்கிரமிப்பால், விவசாயிகள் நீரை சேமித்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கோடை காலங்களில் விவசாயத்திற்கும், கால்நடை பராமரிப்பிற்கும் நீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.

இது குறித்து அதிகாரிகள் விசாரித்து தாமோதரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சாதிநாயக்கன்பட்டி ஏரி நீர்ப்பிடிப்பு ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, விவசாயி கள் தேவைக்காக ஏரிக்கு கரை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!