இலவச தையல் இயந்திரம் பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம்

இலவச தையல் இயந்திரம் பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம்
X

கிருஷ்ணகிரி ஆட்சியர்.

இலவச தையல் இயந்திரம் பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெண்கள் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் பெற விருப்பம் உள்ளவர்கள் அனைத்து இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தினை கணினிமயம் ஆக்குவது தொடர்பாக வலை பயன்பாடு (Web Application) TNeGA மூலமாக தயார் செய்யப்பட்டு, அனைத்து அரசு இ-சேவை மையங்களுக்கும் அதற்கான லிங்க் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இனி வரும் காலங்களில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் பெண்கள் மட்டுமே கீழ்கண்ட தகுதிகளுடன் அனைத்து இ- சேவை மையங்களிலும் விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

தகுதிகள்:

1. விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் (20 வயது முதல் 40 வயது வரை)

2. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் (20 வயது முதல் 35 வயது வரை) 3. மாற்றுத்திறனாளிகள்

4. வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.72000/-க்கு மிகாமல்)

5. தையல் பயிற்சி சான்று (குறைந்தபட்ச பயிற்சி காலம் -6 மாதம்)

6. கணவர் இறப்பு சான்று (விதவையாக இருக்கும்பட்சத்தில்)

7. விதவை சான்று (விதவையாக இருக்கும்பட்சத்தில்)

8. இருப்பிட சான்று

9. சாதி சான்று 10. ஆதார் அட்டை 11. குடும்ப அட்டை 12. வயது சான்று

13. கல்வி சான்று

மேற்கண்ட சான்றுகளுடன் இலவச தையல் இயந்திரம் கோரும் விண்ணப்பதாரர்கள் அனைத்து இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..