யானையை சுட்டுக்கொன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது

யானையை சுட்டுக்கொன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது
X
தேன்கனிக்கோட்டை அருகே யானையை சுட்டுக்கொன்ற வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா ஜவளகிரி வனச்சரகத்துக்கு சென்னமாலம் கிராமம் அடுத்துள்ள கக்க மல்லேஸ்வரசுவாமி கோயில் அருகே கடந்த அக் 29ம் தேதி ஒரு ஆண் காட்டு யானை உயிரிழந்து கிடந்தது. அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வன ஊழியர்கள் அதனை பார்த்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற ஓசூர் வனக்கோட்ட வன உயிரினகாப்பாளர் கார்த்தி கேயனி, உதவி வன பாதுகாவலர் ராஜ மாரியப்பன் மற்றும் ஜவளகிரி வனச்சரகர் உள்ளிட்ட வனத்துறையினர் காட்டு யானையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் உயிரிழந்த யானை சுமார் 15 வயது மதிக்கத்தக்கது எனவும், காட்டு யானையின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இருந்ததும் 2 தந்தங்கள் உடலில் அப்படியே இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வேட்டைக்காக காட்டு யானை சுட்டு கொல்லப்படவில்லை என வனத்துறையினர் அறிந்தனர்.

இதனையடுத்து வனத்துறையினர் வனத்துறை கால்நடை மருத்துவர் குழுவினரை கொண்டு அதே இடத்தில் காட்டு யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.

இதனிடையே 15 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானையை சுட்டு கொன்றது யார்? என்பது குறித்து வனத்துறையினர் சிறப்பு குழு அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் ஜவளகிரி வனப்பகுதிக்கு அருகே உள்ள சென்ன மாளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முத்து மல்லேஷ் என்பவர் காட்டு யானையை நாட்டுதுப்பாக்கியால் சுட்டு கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் தனது ராகி பயிர்களை யானை நாசம் செய்ததால் துப்பாக்கால் சுட்டுக் கொன்றதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரை தேன் கனிக்கோட்டை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

இதனிடையே வனசரகர் விஜயன் மற்றும் வனத்துறையினர் தீவிர விசாரனை மேற்கொண்ட தில் யானையை சுட்டு கொன்ற வழக்கில் மேலும் ஒருவர் இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சீனிவாசமூர்த்தி (34) என்பவரை கைது செய்து வழக்கு பதிந்து தேன்கனிக் கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
சத்தியமங்கலத்தில் விசிக ஆர்ப்பாட்டம்...! அமித்ஷாவுக்கு எதிராக கோஷங்கள்..!