கிருஷ்ணகிரியில் ஆட்சிமொழிச் சட்டவார விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரியில் ஆட்சிமொழிச் சட்டவார விழிப்புணர்வு பேரணி
X
கிருஷ்ணகிரியில் ஆட்சிமொழிச் சட்டவார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழாவையொட்டி, ஆட்சிமொழிச் சட்டவார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் பவானி முன்னிலையில் அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்தும் நோக்கில் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளை நினைவு கூரும் வகையில் கிருட்டினகிரி மாவட்டத்தில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழா 18.012.2023 முதல் 27.12.2023 வரை ஒருவார காலத்திற்கு கொண்டாடப் பெறவுள்ளது.

முதல்நாள் நிகழ்வாக ஆட்சிமொழிச் சட்டவார விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பேரணி கிருட்டினகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் தொடங்கி பழையபேட்டை காந்திசிலை வரை நடைபெற்றது. பேரணியில், 200 கல்லூரி மாணவிகள், தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் அரசுப் பணியாளர்களுக்கு ஆட்சிமொழிச் சட்ட வரலாறு, செயலாக்க அரசாணை, தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி, மொழிப் பயிற்சி, மொழி பெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும் குறித்து பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை அமைத்தல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், ஆட்சிமொழிச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பட்டிமன்றம், பொதுமக்களுக்கு ஆட்சிமொழிச் சட்டம் குறித்த விழிப்புணர்வு திட்ட விளக்கக் கூட்டம் என தொடர்ந்து 7 நாள்கள் நடைபெற உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!