கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று தேசிய குடற்புழு நீக்க முகாம்
ஆல்பெண்டாசோல் மாத்திரை. (பைல் படம்)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க முகாம் இன்று நடைபெறுகிறது. விடுப்பட்ட குழந்தைகளுக்கான முகாம் 24.08.2023 ஆம் தேதி நடைபெறும், சிறப்பாக இம்முகாமினை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமில் 1 முதல் 19 வயது வரையிலான சிறுவர்கள், கருவுறாத மற்றும் பாலூட்டாத 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். இதில் 1 முதல் 2 வயது குழந்தைகளுக்கு ஆல்பெண்டாசோல் 200 மி.கி மாத்திரையும் 2 முதல் 19 வயது சிறுவர்கள் மற்றும் 20-30 வயதுடைய பெண்களுக்கு 400 மி.கி ஆல்பெண்டாசோல் மாத்திரையும் வழங்கப்படும்.
இம்மாத்திரைகளை காலை அல்லது மதிய உணவிற்கு பிறகு நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இம்மாத்திரை சாப்பிடுவதால் குடற்புழு முற்றிலும் நீக்கப்படும் இரத்தசோகை நோய் மற்றும் ஊட்டசத்து குறைபாடு நீங்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி அதிகரிப்பு, குழந்தையின் எடை அதிகரிப்பு, பிற நோய் தொற்றுகளுக்கு எதிர்ப்பு, மேம்படுத்தப்பட்ட அறிவாற்றல், சுறுசுறுப்பாக இருத்தல் ஆகியவை மேம்பாடு அடையும்.
குடற்புழு தொற்று (STH) பின்னணி உலக மக்கள் தொகையில் 24% பேர் மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று (STH) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் (ஆதாரம் -WHO) மொத்த உலகளாவிய தொற்றுகளில் இந்தியா மட்டும் கிட்டத்தட்ட 25% பங்களிக்கிறது (ஆதாரம் -WHO) தமிழ்நாட்டில் இப்பரவல் 25% உள்ளது.
மக்கள் தொகையில் 1 சதவீதம் பேர் திறந்தவெளியில் மலம் கழித்தால் கூட அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு குடற்புழு தொற்று ஏற்படலாம். தொற்றுடைய மண் மூலம், மண்ணில் விளையும் பொருட்கள் மூலம், மண்ணில் கை கால்கள் படுவதன் மூலம் மனிதர்களுக்கு குடற்புழு தொற்று ஏற்படுகிறது.
குடற்புழு தொற்றின் அறிகுறிகள்:
பொதுவாக அறிகுறிகள் இருக்காது கடுமையான தொற்று உள்ளவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, பலவீனம், பசியின்மை, குடற்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குடற்புழுக்கள் மனிதன் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள இரும்புத் சத்து, ஊட்டச்சத்து வைட்டமின்கள் போன்றவற்றினை எடுத்துக் கொண்டு குடற்புழு வளர்கிறது. குடற்புழு தொற்றினால் இரும்புச் சத்து இழப்பு, இரத்தசோகைக்கு உள்ளாகி ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, அதனால் உடல் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது. உருண்டைப்புழு குடலில் வைட்டமின் சத்து செறிமானத்தை தடுப்பதால் வைட்டமின் ஏ சத்து குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது.
குடற்புழு நீக்கம் -ஆல்பெண்டாசோல் மருந்தினால் ஏற்படும் நன்மைகள் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி
குழந்தையின் எடை அதிகரிப்பு
பிற நோய் தொற்றுகளுக்கு எதிர்ப்பு
மேம்படுத்தப்பட்ட அறிவாற்றல்
மன மற்றும் உடல் வளர்ச்சியுடன் குழந்தைகளின் சிறந்த கற்கும் திறன்.
பள்ளி வருகையை அதிகரித்து, பள்ளிகளில் சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது. வாலிப வயதினர் மற்றும் பேறுகால மகளிர்க்கு:
சுறுசுறுப்பாக இருத்தல்
பணியில் ஆர்வம் நீண்ட நேரம் வேலை செய்யும் திறன் மேம்படுகிறது.
இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1-19 வயது வரை உள்ள 5,52,417 குழந்தைகளுக்கும், 20-30 வயது வரை உள்ள 1,64,549 பெண்களுக்கும், மொத்தம் 7,16,966 நபர்களுக்கு ஆல்பெண்டாசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்கள், (1796) துணை சுகாதார நிலையங்கள் (270), ஆரம்ப சுகாதார நிலையங்கள் (61), பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆல்பெண்டாசோல் மாத்திரை வழங்கும் முகாம் நடைபெறுகிறது இம்முகாமில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu