பாம்புகள் ஊருக்குள் வராமல் இருக்க நாகதேவதை தேர்திருவிழா

பாம்புகள் ஊருக்குள் வராமல் இருக்க நாகதேவதை தேர்திருவிழா
X

நாக தேவதை தேர் திருவிழா 

நாகதேவதைக்கு ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகளை பலியிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த செல்லகுடப்பட்டி ஊராட்சி நாகர்குட்டை பகுதியில் மலை அடி வாரத்தில் பிரசித்தி பெற்ற நாகதேவதை கோவில் உள்ளது. இங்கு மூலவராக நாக தேவதை சிலை அமைந்துள்ளது.

சிலையின் அடிப்பகுதியில் பாம்பு வடிவிலான உருவம் உள்ளது. இது இயற்கையாக உருவாகிய அமைப்பு ஆகும்.

ஆண்டுதோறும் தை மாதம் காணும் பொங்கல் அன்று நாகதேவதைக்கு திருவிழா நடப்பது வழக்கம். இந்த பகுதியை சுற்றி மலைகள், மலைக்குட்டைகள் உள்ளன. புதர்கள் அதிக அளவில் மண்டி உள்ளதால் அடிக்கடி விஷ பாம்புகள் ஊருக்குள் வந்து விடும்.

ஆகையால் ஊருக்குள் பாம்புகள் வராமல் இருக்க இந்த பகுதி மக்கள் ஆண்டு தோறும் நாகதேவதைக்கு ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகளை பலியிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவார்கள்.

அதேபோல் காலை முதலே சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் புத்தாடை அணிந்து கூட்டம் கூட்டமாக வந்து நாகதேவதையை வணங்கினார்கள். கோவில் முன்பு பொங்கல் வைத்து ஆடு கோழிகளை பலியிட்டு தங்கள் நேர்த்திகடன் செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து மாலையில் தேர் அலங்கரிக்கப்பட்டு மலையை சுற்றி வலம் வந்தது. அப்போது கூடி இருந்த பக்தர்களும், விவசாயிகளும் தாங்கள் கொண்டு வந்த ஆமணக்கு விதைகள், உப்பு, மிளகு உள்ளிட்ட தானியங்களை வாரி இறைத்து தங்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.

விழாவில் பெங்களூர், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டிணம், பாரூர் அரசம்பட்டி, தருமபுரி, திருப்பத்தூர், மத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் அசம்பாவி தங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!