கோல்டன் வெஜிடபுள் மார்க்கெட் திறப்பு விழா: அமைச்சர் நேரு பங்கேற்பு
கோல்டன் வெஜிடபுள் மார்க்கெட்டை திறந்து வைக்கும் அமைச்சர் கே என் நேரு
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுக்கா, சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சப்படி அருகே நல்லகான கொத்தப்பள்ளி கிராமத்தில் "கோல்டன் வெஜிடபுள் மார்க்கெட்" என்ற புதிய காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவில்அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அமைச்சர் சக்கரபாணி, ஆகியோர் கலந்து கொண்டனர். கோல்டன் வெஜிடபுள் மார்க்கெட் சங்க நிறுவனர்கள் ஆதிநாராயணன் மற்றும் ராஜாரெட்டி ஆகியோர் வரவேற்றனர்.
இந்த தனியார் காய்கறி மார்க்கெட், விவசாயிகளின் கூட்டு முயற்சியினால் 23 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இதில் சுமார் 350 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓரே நேரத்தில் வெளி மாநிலத்திலிருந்து 1,000-க்கும் மேற்பட்ட லாரிகள் மார்க்கெட்டிற்குள் வந்து, 2,000 டன் காய்கறிகளை இறக்கி, ஏற்றிச் செல்லும் அளவிற்கு தாராள இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், மார்க்கெட்டிற்கு வரும் லாரி டினாவர்கள், சுமைதூக்கும் தொழிலாளிகள் உள்ளிட்ட வர்களுக்கு தங்குமிடம் மற்றும் குளியலறைகள், கழிப்பிட வசதி ஆகியவையும் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு விருந்தினர்களாக, எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ் (ஓசூர்), தளி ராமச்சந்திரன், டாக்டர் செல்லகுமார் எம்.பி, ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய காய்கறி மார்க்கெட்டை திறந்து வைத்து அமைச்சர் கே.என் நேரு கூறுகையில் தமிழ்நாட்டில் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு அடுத்து ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட், மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டாக விளங்கி வருகிறது. அந்த வரிசையில், அதிகளவில் காய்கறிகளை விளைவிக்கக் கூடிய பகுதியான ஓசூரில் இந்த, கோல்டன் வெஜிடபுள் மார்க்கெட் புதிதாக அமைக்கப்பட்டிருப்பதை வாழ்த்துகிறேன் என்று கூறினார்
பின்னர், அமைச்சர்கள் கே.என்.நேரு, சக்கரபாணி ஆகியோருக்கு காய்கறி மார்க்கெட் சார்பில், ஆதிநாராயணன் ராஜா ரெட்டி ஆகியோர் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. பி.முருகன், சூளகிரி ஒன்றிய கவுன்சிலர் நாகேஷ், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபி பிரான்சினா, விமல் ரவிகுமார், கோனேரிப் பள்ளி ஊராட்சி தலைவர் கோபம்மா சக்கர்லப்பா, ஆகியோரும், ஜெயராமன் உள்ளிட்ட காய்கறி மார்க்கெட் சங்க நிர்வாகிகள், கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu