கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 89.06 சதவீதம் பேர் தேர்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 89.06 சதவீதம் பேர் தேர்ச்சி
X

Krishnagiri News, Krishnagiri News Today-கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வில், 89.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். (கோப்பு படம்)

Krishnagiri News, Krishnagiri News Today-கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வில், 89.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்

Krishnagiri News, Krishnagiri News Today - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை, தனியார் மற்றும் அரசு பள்ளிகள் பயிலும் 10061 மாணவர்கள், 10642 மாணவிகள் என மொத்தம் 20703 பேர் எழுதினர்.

இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 முடிவுகள் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டார். இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களில் -8648 பேரும், மாணவிகள் 9760 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 18498 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 89.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 88.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டைவிட இந்த 1.5 சதவீதம் பேர் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

‘சென்டம்’ அடித்த பள்ளிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் மொத்தம் 84 பள்ளிகளில் பயின்ற பிளஸ்-2 மாணவர்கள் 20703 பேர் தேர்வு எழுதினர். இதில் 89.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் மாவட்டத்தில் 4 அரசு பள்ளிகள் மற்றும் 40 தனியார் பள்ளிகள் என மொத்தம் 44 பள்ளிகளில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

தமிழகத்தில், இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையில், மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும், திருப்பூர் மாவட்டம் இரண்டாமிடத்தையும் பெற்றது. வழக்கம்போல் இந்த ஆண்டு தேர்ச்சியிலும், மாணவர்களை விட மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!