போச்சம்பள்ளி அருகே கிணறில் மூழ்கி 5 வயது, 3 வயது குழந்தைகள் உயிரிழப்பு

போச்சம்பள்ளி அருகே  கிணறில் மூழ்கி 5 வயது, 3 வயது குழந்தைகள் உயிரிழப்பு
X

Krishnagiri News, Krishnagiri News Today - நீரில் மூழ்கிய 2 குழந்தைகள் உயிரிழப்பு (கோப்பு படம்)

Krishnagiri News, Krishnagiri News Today- போச்சம்பள்ளி அருகே, கிணறுக்குள் தவறி விழுந்த 5 வயது அக்கா, 3 வயது தம்பி இருவரும், நீரி்ல் மூழ்கி உயிரிழந்தனர்.

Krishnagiri News, Krishnagiri News Today - போச்சம்பள்ளி அருகே கிணற்றில் மூழ்கி அக்காள், தம்பி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மகாதேவ கொல்லஅள்ளி பூலான்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன். இவர் சென்னையில் உள்ள ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சந்திரிகா. இவர்களுக்கு ஸ்ரீநிகா (வயது 5) என்ற மகளும், அனிருத் (3) என்ற மகனும் இருந்தனர்.

இதற்கிடையே சந்திரிகா தனது மகள், மகனுடன் கொல்லஅள்ளி பூலான்குட்டையில் வசித்து வந்தார். நேற்று மாலை ஸ்ரீநிகா, அனிருத் தங்களது வீட்டுக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில், விளையாடி கொண்டிருந்தனர்.அப்போது அங்குள்ள கிணற்றில் அக்கா, தம்பி எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

அதே நேரத்தில் அந்த வழியாக ஒரு மணி நேரத்துக்கு யாரும் செல்லாததால் அவர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தது யாருக்கும் தெரியவில்லை. இதனிடையே விளையாட சென்ற குழந்தைகள் வீட்டுக்கு வராததால், அதிர்ச்சி அடைந்த சந்திரிகா அவர்களை பல்வேறு இடங்களில் தேடினார்.அப்போது தனது 2 குழந்தைகளும் கிணறில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்ததை அறிந்து, கதறி அழுதார். இதுகுறித்து போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கி இறந்த குழந்தைகளின் உடலை மீட்டனர். தகவல் அறிந்து சென்ற போச்சம்பள்ளி போலீசார் 2 பேரின் உடல்களையும், போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் மூழ்கி பிஞ்சு குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

பெற்றோரே உஷாரா இருங்க

இப்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 15 வயதுக்கு உட்பட்ட தங்களது பிள்ளைகளை, பெற்றோர்கள் மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, கோடை காலமாக இருப்பதால், நீர்நிலை பகுதிகளுக்குச் செல்லவும் ஆற்றி்ல், குளத்தில், கிணறில் குளிக்கவும் பிள்ளைகளுக்கு அதிக ஆர்வம் ஏற்படும் வாய்ப்புள்ளது. அவ்வாறு, நீர்நிலைகளுக்கு செல்லாதபடி, தங்களது பிள்ளைகள் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படியே நீர்நிலைகளுக்கு செல்ல நேர்ந்தாலும், பெற்றோர்கள், பெரியோர்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பாக இருந்து, கவனமாக இருந்து குழந்தைகளை காக்க வேண்டிய மிகவும் முக்கியம்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!