கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி: ஒரு பார்வை
தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் கிருஷ்ணகிரி 9-வது தொகுதியாக உள்ளது. தமிழகத்தில் ஒரு காலத்தில் காங்கிரஸ் வலிமையாக இருந்த தொகுதிகளில் கிருஷ்ணகிரியும் ஒன்று. கர்நாடக, ஆந்திர எல்லையையொட்டிய தொகுதி என்பதால், தமிழ் மொழி பேசும் மக்கள் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களும் கணிசமாக வசிக்கும் தொகுதி. வேளாண்மை, கிரானைட் வெட்டுதல் போன்றவை மக்களின் வாழ்வாதாராமாக உள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு உள்பட 5 மொழி பேசும் மக்கள் இங்கு வசிக்கின்றனர்.
தேர்தலில் இவர்களது முடிவும் எதிரொலிக்கும் என்பதால், அரசியல் கட்சிகள் அதற்கு ஏற்ற வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்வது வழக்கம். மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி பல முறைபோட்டியிட்டு வென்ற தொகுதி இது. இதனால் காங்கிரஸுக்கு மட்டுமல்லாமல் வாழப்பாடி ராமமூர்த்திக்கென தனிப்பட்ட செல்வாக்கு இருந்த தொகுதியாக இருந்து வந்தது.
பலமுறை காங்கிரஸ் வென்ற இந்த தொகுதியில் சமீபகாலமாக திமுகவும், அதிமுகவும் பலம் காட்டி வருகின்றன.
கிருஷ்ணிகிரி, ஒசூர் தொகுதிகளில் அதிகமான தொழிற்சாலைகள் இருப்பதால் தொழிலாளர்களும் கணிசமாக வசிக்கின்றனர். இதுமட்டுமின்றி காய்கறிகள், பூக்கள் என தோட்டப்பயிர்கள் அதிகஅளவில் பயிர் செய்யப்படும் பகுதியாகவும் கிருஷ்ணகிரி தொகுதி விளங்கி வருகிறது.
ரோஜா பூக்கள் இங்கிருந்து அதிகஅளவில் ஏற்றுமதி ஆகிறது. பெங்களூருக்கு மிக அருகில் இருப்பதால் ஐடி உள்ளிட்ட நிறுவனங்களும் ஒசூரை மையப்படுத்தி தற்போது தளிர்த்து வருகின்றன.
இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்
- கிருஷ்ணகிரி
- ஒசூர்
- பர்கூர்
- தளி
- ஊத்தங்கரை (எஸ்சி)
- வேப்பனஹள்ளி
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி இதுவரை 17 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 8 முறை காங்கிரஸ் வெற்றி வாகை சூடியுள்ளது. 5 முறை தி.மு.க , 4 முறை அ.தி.மு.க, 1 முறை த.மா.கா வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2019 தேர்தலில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. காங்கிரஸ் வேட்பாளர் ஏ. செல்லகுமார் அ.தி.மு.கவின் மூத்த தலைவர் கே. பி. முனுசாமியை 1,56,765 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
முந்தைய தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள்
1951 சி. ஆர். நரசிம்மன் (காங்கிரஸ்)
1957 சி. ஆர். நரசிம்மன் (காங்கிரஸ்)
1962 க. இராசாராம் (திமுக)
1967 கமலநாதன் (திமுக)
1971 தீர்த்தகிரி கவுண்டர் (காங்கிரஸ்)
1977 பி.வி.பெரியசாமி (அதிமுக)
1980 வாழப்பாடி ராமமூர்த்தி (காங்கிரஸ்)
1984 வாழப்பாடி ராமமூர்த்தி (காங்கிரஸ்)
1989 வாழப்பாடி ராமமூர்த்தி (காங்கிரஸ்)
1991 கே.வி.தங்கபாலு (காங்கிரஸ்)
1996 சி.நரசிம்மன் (த.மா.கா)
1998 கே.பி. முனுசாமி (அதிமுக)
1999 வெற்றிச்செல்வன் (திமுக)
2004 இ. கோ. சுகவனம் (திமுக)
2009 இ. கோ. சுகவனம் (திமுக)
2014 கே. அசோக் குமார் (அதிமுக)
2019 ஏ. செல்லக்குமார் (காங்கிரஸ்)
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu