இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கல்

இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கல்
X

two girl child welfare schemes - இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.

two girl child welfare schemes - இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சமுக நலத்துறை சார்பாக, இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு குறைதீர் முகாமை மாவட்ட ஆட்சியர் சரயு இன்று (11.07.2023) துவக்கி வைத்து 6 பயனாளிகளுக்கு ரூ.3 இலட்சம் மதிப்பிலான வைப்புத் தொகை இரசீதுகள் மற்றும் முதிர்வுத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலமைச்சரின் இரு பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டதின் மூலம் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதம் குறைந்து உயர்கல்வி பயிலும் பெண் குழந்தைகளின் விகிதம் அதிகரித்து வருகிறது. மேலும் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாம் செவ்வாய்க்கிழமை அன்று இத்திட்டம் தொடர்பாக சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

முதலமைச்சரின் இரு பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 2022-2023-ம் நிதியாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 624 பெண் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். மேலும் ஏப்ரல் 2023 முதல் தற்போது வரை 154 பெண் குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் தலா ரூ.25,000 வீதம் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. வைப்பீடு செய்யப்பட்ட தொகை பெண் குழந்தைக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாகவோ அல்லது காசோலையாகவோ வழங்கப்படும்.

தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு முதல் சுமார் 800 பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் முதிர்வுத் தொகை பெற்று உயர்கல்வி பயின்று வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூகநல அலுவலக களப்பணியாளர்கள் மூலம் இத்திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு மேற்கொண்டு புதிய பயனாளிகளை கண்டறியவும், இத்திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை பெற்று வழங்கிடவும், இத்திட்டம் தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்திடவும் சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.

எனவே, பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். இளம் வயது திருமணங்களை முற்றிலும் தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!