கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் துவக்கி வைப்பு
கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலர்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் இன்று (21.11.2023) துவக்கி வைத்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததாவது:
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்-3 ஆம் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அதனைத்தொடர்ந்து இந்த வருடமும் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டப்பந்தயம் மற்றும் முற்றிலும் /குறைவாக பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோருக்கான நின்று நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம் மற்றும் கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான காலிபர் நடைப்போட்டி, மூன்று சக்கர வண்டி ஓட்டப்போட்டி, சக்கரநாற்காலி ஓட்டப்போட்டி மற்றும் கைகள் பாதிக்கப்பட்டோருக்கான ஓட்டப்பந்தயம் மற்றும் அறிவுசார் குறையுடையோருக்கான நின்று நீளம் தாண்டுதல், ஓடிநீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் மற்றும் ஸ்பாஸ்டிக் குழந்தைகளுக்கான உருளைக்கிழங்கு சேகரித்தல், கிரிக்கெட் பந்து எறிதல், தடைதாண்டி ஓடுதல் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இப்போட்டியில், பர்கூர் பார்வையற்றோர்க்கான சிறப்பு பள்ளியில் இருந்து 40 மாற்றுத்திறனாளி மாணவர்களும், 20 மாற்றுத்திறனாளி மாணவியர்களும், பர்கூர் மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்பு பள்ளியில் இருந்து 42 மாற்றுத்திறனாளி மாணவர்களும், 28 மாற்றுத்திறனாளி மாணவியர்களும், மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான ஆரம்ப கால பயிற்சி மையத்தில் இருந்து 2 மாற்றுத்திறனாளி மாணவர்களும், 6 மாற்றுத்திறனாளி மாணவியர்களும், அரசு பள்ளியைச் சேர்ந்த 9 மாற்றுத்திறனாளி மாணவர்களும், 4 மாற்றுத்திறனாளி மாணவியர்கள் என மொத்தம் 151 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 03.12.2023 அன்று மாற்றத்திறனாளிகள் தினத்தன்று பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், வட்டாட்சியர் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் குமரேசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu