அகில இந்திய மாங்கனி கண்காட்சி துவக்க விழா: கிருஷ்ணகிரியில் ஆலோசனைக் கூட்டம்
29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி துவக்க விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 05.07.2023 அன்று துவங்கவுள்ள 29 - வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறுவதையொட்டி, விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சரயு தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி 05.07.2023 அன்று நடைபெற உள்ளது. இக்கண்காட்சியை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். அரசு துறைகள் சார்பாக அரங்குகளும், தனியார் அங்காடிகள் மற்றும் கலையரங்கம், மா கண்காட்சி அரங்கு, கேளிக்கை அரங்குகள், திண்பண்ட கடைகள், ஆவின் பாலகம், மகளிர் சுய உதவிக்குழு தயாரிப்பு பொருட்கள் விற்பனை அங்காடிகள் என அனைத்து துறைகளுடைய அரசு சாதனை விளக்க அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. மேலும், பள்ளி கல்வி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், உள்ளூர் கலைஞர்களின் இன்னிசை கச்சேரி, பட்டிமன்றங்கள், நாட்டிய நிகழ்ச்சி மற்றும் விடுமுறை நாட்களில் இன்னிசை நிகழச்சிகள் நடைபெற உள்ளது.
மேலும், அனைத்து அரசு துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரங்குகளில் தமிழ்நாடு அரசின் சாதனைகள், துண்டு பிரசுரங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்தும், அரசின் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்துக்கொள்ளும் வகையில் சிறப்பாக அரங்குகள் அமைக்கப்பட வேண்டும். நகராட்சி சார்பாக நாள்தோறும் தூய்மை பணிகள் மற்றும் குடிநீர் விநியோக பணிகளையும், மின்சாரத்துறை சார்பில் பாதுகாப்பான மின் விநியோக பணிகளையும், காவல்துறை சார்பாக பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். துறை சார்ந்த அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு, பேருந்து வசதியும், மாங்கனி கண்காட்சி திடலுக்கு செல்வதற்கு பெங்களூர் சாலை வழியாகவும், மாங்கனி மைதானத்திலிருந்து வெளியே செல்வதற்கு காந்தி சாலை வழியாக தனித்தனி வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இக்கண்காட்சியை மாலை 05.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கண்டுகளிக்கலாம். விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் அதிக அளவில் வருகை தருவதை கருத்தில் கொண்டு நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடத்தை காவல்துறை தேர்வு செய்ய வேண்டும். மேலும், தடை செய்யப்பட்டுள்ள பேனர்களை அனுமதியின்றி வைக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், ஒசூர் மாநகராட்சி ஆணையர் சினேகா, ஒசூர் சார் ஆட்சியர் ஆர்.சரண்யா, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் எஸ்.பாபு, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை (பொ) சீனிவாசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்முருகேசன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி மற்றும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, காவல் துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu