தளியில் செல்போன் திருடிய இருவர் கைது: செல்போன், இருசக்கர வாகனம் பறிமுதல்

தளியில் செல்போன் திருடிய இருவர் கைது: செல்போன், இருசக்கர வாகனம் பறிமுதல்
X

போலீசார் வெளியிட்டுள்ள படம்.

தளியில் செல்போன் திருடியதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி காவல் நிலையப் பகுதியில் மஞ்சுநாத் என்பவர் கடந்த 15ம் தேதி உப்பாரள்ளியில் உள்ள மிண்டா கம்பெனி அருகே அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு செல்போனை டேங்க் கவரில் வைத்துவிட்டு கடைக்கு சென்றுள்ளார்.

அவர் மீண்டும் திரும்பி வந்து பார்க்கும்போது செல்போன் திருடுபோய் இருந்ததாக மஞ்சுநாத் தளி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து செல்போன் திருடிய இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!