ஓசூர் அருகே சானமாவு பகுதியில் மூன்று யானைகள் முகாம்

ஓசூர் அருகே சானமாவு பகுதியில் மூன்று  யானைகள் முகாம்
X

மாதிரி படம்

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் மூன்று யானைகள் சுற்றி வருவதால் கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில், கடந்த சில நாட்களாக மூன்று ஒற்றை யானைகள் தனித்தனியாக சுற்றி வருகின்றன.

அடிக்கடி யானைகள் கிராமப் பகுதிகளுக்கு வந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதனால் டி.கொத்தப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, சானமாவு, அம்பலட்டி, நாயக்கனப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் வேட்டை தடுப்பு பிரிவினர், வனத்துறையினர் 15 பேர் இணைந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறினர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்