தென்பெண்ணை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பூ வியாபாரி உடல் மீட்பு

தென்பெண்ணை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பூ வியாபாரி உடல் மீட்பு
X

தென்பெண்ணை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பெருமாள் உடலை மீட்ட தீயணைப்புத்துறையினர்.

ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பூ வியாபாரியின் உடலை தீயணைப்புத்துறையினர் இன்று மீட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த சூளகிரி இந்தியன் வங்கி எதிரே பூக்கடை வைத்திருப்பவர் பெருமாள். இவர் நேற்று கோபசந்திரம் தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றபோது அடித்து செல்லப்பட்டார். இதனையடுத்து தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு, அதே பகுதியில் தடுப்பணை அருகே பெருமாள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறையை சூளகிரி காவல் ஆய்வாளர் பாராட்டினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!