ஓசூர் மின்நகர் துணை மின் நிலைய பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

ஓசூர் மின்நகர் துணை மின் நிலைய பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
X

பைல் படம்.

ஓசூர் மின்நகர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், ஓசூர் மின்நகர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

அதன்படி, சானசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிபள்ளி, பழைய டெம்பிள் அட்கோ, புதிய பேருந்து நிலையம் காமராஜ் காலனி, அண்ணா நகர் எம்ஜீ ரோடு நேதாஜீ ரோடு (பகுதி), சீத்தாராம் நகரீ, வானவில்நகர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!