சூளகிரியில் பகுதி நேர ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு ஆலோசனைக்குழு கூட்டம்
![சூளகிரியில் பகுதி நேர ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு ஆலோசனைக்குழு கூட்டம் சூளகிரியில் பகுதி நேர ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு ஆலோசனைக்குழு கூட்டம்](https://www.nativenews.in/h-upload/2021/07/22/1188801-whatsapp-image-2021-07-21-at-20048-pm.webp)
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பகுதி நேர ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு ஆலோசனைக்குழு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு ஆசிரியர்கள் கருணாநிதி, இளங்கோவன், சிவபெருமாள், திராவிடன் ரமேஷ், மாதப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஆசிரியர் சுரேஷ் வரவேற்று பேசினார். பணி நிரந்தரம் குறித்து ஆலோசனை விவாதிக்கப்பட்டது. கொரானோ மற்றும் இயற்கையாக உயிர் நீத்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜனை பகுதி நேர ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பு குழு கெளரவ தலைவராக ஏற்று அவர் வழியில் செயல்படுவது எனவும்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விரைவில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஆசிரியை ரத்னா நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu