சூளகிரியில் நாளை ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி

சூளகிரியில் நாளை ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

ஊட்டச்சத்து வாரம், விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவம் மற்றும் கோவிட் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஆகியவை அடங்கிய ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சியை தர்மபுரி மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் சூளகிரி ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாடு சேவைகள் திட்டம் ஆகியவை நாளை நடத்தவுள்ளன. சூளகரி வட்டார மேம்பாட்டு அலுவலர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மருத்துவ சேவைகள் துணை இயக்குநர் டாக்டர் வி கோவிந்தன் துவக்கி வைப்பார்.

எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்ட நடமாடும் பிரச்சார ஊர்தியையும் நிகழ்ச்சியின்போது அவர் கொடியசைத்துத் துவக்கி வைப்பார். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு வட்டாரங்களுக்கு இந்த ஊர்தி பயணம் செய்து, ஊட்டச்சத்து மாதம், கோவிட்-19 தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு

மற்றும் இந்தியாவின் 75-ஆவது சுதந்திர ஆண்டு ஆகியவை குறித்த காணொளி செய்திகளை மக்களிடையே எடுத்துச் செல்லும்.

சூளகிரி வட்டார மேம்பாட்டு அதிகாரி (வட்டார பஞ்சாயத்து) எஸ். சிவகுமார்,வட்டார பஞ்சாயத்து அதிகாரி (கிராம பஞ்சாயத்து) எம். சுப்பிரமணியன் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். கிருஷ்ணகிரி மாவட்ட சமூக சேவை அதிகாரி பி. பூங்குழலி, சூளகிரி ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவையின் குழந்தை வளர்ச்சித் திட்ட அதிகாரி ஜெய் சுகந்தி, சூளகிரி வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் என்.எம்.வெண்ணிலா, சூளகிரி மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர் ஹரிராம் ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்பார்கள். ஆரோக்கியமான குழந்தை போட்டி, ஆரோக்கியமான தாய் போட்டி, சிறந்த ஊட்டச்சத்துத் தோட்டம், ரங்கோலி போட்டி ஆகியவையும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடத்தப்படும்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்