ஓசூர் அருகே ரூ.12 லட்சம் மதிப்பு குட்கா பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

ஓசூர் அருகே ரூ.12 லட்சம் மதிப்பு குட்கா பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகளுடன் போலீசார்.

ஓசூர் அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பு குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தமிழக எல்லை பகுதியில், ஓசூர் டி.எஸ்.பி சிவலிங்கம் மற்றும் சிப்காட் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திகிரி எஸ்.ஐ சிற்றரசு மற்றும் நிலைய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஈச்சர் வாகன நிறுத்து சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் காய்ந்த மிளகாய் மூட்டைகளுக்கு அடியில் பதுக்கிய வைத்திருந்த 2 டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் புதுகோட்டையை சேர்ந்த தேவதாஸ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ரூ.12 இலட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 10 லட்சம் மதிப்புள்ள வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்தனர்.

Tags

Next Story
ai healthcare products