ஓசூரில் திடீரென தீப்பற்றிய எலக்ட்ரிக் பைக்: குழந்தையுடன் தப்பித்த ஓட்டுநர்

ஓசூரில் திடீரென தீப்பற்றிய எலக்ட்ரிக் பைக்: குழந்தையுடன் தப்பித்த ஓட்டுநர்
X

தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்.

ஓசூரில் எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றியதில் குழந்தையுடன் ஓட்டுநர் தப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வருபவர் சதீஷ் (வயது 29 ). இவர் தமிழகத்தின் ஓசூர் புறநகர் பகுதியில் உள்ள ஜூஜூவாடியிலிருந்து ஓசூர் செக்போஸ்ட் ரிங் ரோடு அருகே உள்ள உப்கார் லேஅவுட் 3வது கிராசில் தனது எலக்ட்ரிக் பைக்கில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென எலக்ட்ரிக் பைக் தீப்பற்றி எரிந்தது. இதில் ஒக்கினாவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எரிந்து நாசமானது.

இதில் சதீஷ் மற்றும் அவருடன் சென்ற அவருடைய மூன்று வயது மகனும் உடனடியாக வாகனத்தை நிறுத்தி தப்பினர். வாகனத்தின் முன் பகுதியில் வைத்திருந்த செல்போனும் மீட்கப்பட்டது.

தீயை அணைக்க அக்கம்பக்கத்தினர் அனைவரும் உதவினர். பின்னர் சதீஷ் சிப்காட் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த எலக்ட்ரிக் பைக் விற்பனையகத்தின் சர்வீஸ் டீம் வாகன உரிமையாளரின் ஆர்.சி. புத்தகம், காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வகானத்திற்கான ரூ.75000த்தை உரிமையாளரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சேதமடைந்த வாகனத்தை எடுத்துச் சென்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!