வெடி விபத்தில் உயிரிழந்த இளைஞர்களின் பெற்றோர்களிடம் மனு பெற்ற ஆட்சியர்

வெடி விபத்தில் உயிரிழந்த இளைஞர்களின் பெற்றோர்களிடம் மனு பெற்ற ஆட்சியர்
X

வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் மனுக்கனை பெற்ற ஆட்சியர் 

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆறுதல் சொல்லி, அவர்களின் தேவையை கேட்டறிந்தார்

ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப் பள்ளியில் நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் கடந்த 7.10.2023. அன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த டி. அம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்த வேடப்பன், ஆதிகேசவன், இளம்பருதி, விஜயராகவன், ஆகாஷ், கிரி, சச்சின் உள்ளிட்ட 7 இளைஞர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக அப்போதே ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. கர்நாடகா அரசு சார்பில் ரூ. 5 லட்சம் காசோலையை கடந்த 28.10.2023. அன்று வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இறந்தவர்களின் பெற்றோர்களை சந்தித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆறுதல் சொல்லி, அவர்களின் தேவையை கேட்டறிந்த உதவி செய்ய டி.அம்மாபேட்டை கிராமத்திற்கு நேரில் சென்று, அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வரவழைத்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து உயிரிழந்த இளைஞர்களின் தேவைகளை நிறைவேற்றி கொடுப்பதாக உறுதியளித்தார்.

அப்பொழுது ஆட்சியர் வருவதை அறிந்து கிராமமக்கள் ஒன்று திரண்டு அவரிடம் மனுக்களை கொடுக்க திரண்டனர். ஆனால் ஆட்சியர் ஊருக்கு வெளியே உள்ள அரசு பள்ளியில் உயிரிழந்த இளைஞர்களின் பெற்றோர்களை வரவழைத்து பேசி, கோரிக்கை மனுக்களை பெற்று சென்றார்

Tags

Next Story