தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது
X
போச்சம்பள்ளி மற்றும் புளியம்பட்டியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் புளியம்பட்டியில், கொரோனா ஊரடங்கின் போது சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்கள், மற்றும் கொரானா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஆதரவற்ற மக்களுக்காக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனோ விதிமுறைகளை பின்பற்றி முககவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றி நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்டத் துணைத்தலைவரும் புளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியருமான பு.குமார் இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare