கிருஷ்ணகிரி அருகே நேருக்குநேர் கார்கள் மோதல்: பெண்கள் 2 பேர் சாவு

கிருஷ்ணகிரி அருகே நேருக்குநேர் கார்கள் மோதல்:  பெண்கள் 2 பேர் சாவு
X

பைல் படம்

கிருஷ்ணகிரி அருகே இரு கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

பெங்களூரை சேர்ந்தவர் அனில் குமார் (49), இவரது மனைவி அபர்ணா(39).இவரது மகள்கள் அகான்ஷா(17), அக்ஷரா (10), உறவினர் ரம்யா (33). இவர்கள் குடும்பத்தோடு ஒரு காரில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

கிருஷ்ணகிரியை அடுத்த மாதேப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது, பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் அனில்குமார் சென்ற காரின் மீது வேகமாக மோதியது.

இதில் அக்ஷரா, ரம்மியா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த அணில் குமார், அபர்ணா, அகான்ஷா ஆகியோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story