கிருஷ்ணகிரி அருகே மூளைச்சாவில் உயிரிழந்தவருக்கு அரசு மரியாதை

கிருஷ்ணகிரி அருகே மூளைச்சாவில் உயிரிழந்தவருக்கு அரசு மரியாதை
X

தமிழ்நாடு அரசின் சார்பாக மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள்  மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

கிருஷ்ணகிரி அருகே மூளைச்சாவில் உயிரிழந்தவருக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் கோவிந்தராஜ் நேற்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவால் உயிரிழந்ததையடுத்து, அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்யப்பட்டதால், தமிழ்நாடு அரசின் சார்பாக மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் இன்று (03.10.2023) மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

கடந்த 23.09.2023 அன்று தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதல்வர் அறிவித்தார்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம் மற்றும் உள்வட்டம் கெண்டிகாம்பட்டி தரப்பு கொத்தகோட்டை கிராமத்தில் வசித்து வந்த சீனிவாசன் என்பவரின் மகன் கோவிந்தராஜ் (வயது 30) என்பவர் கடந்த 30.09.2023 மாலை சுமார் 06.15 மணியளவில் சமத்துவபுரம் அருகே சாலையை கடக்கும் போது போச்சம்பள்ளியிலிருந்து திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த ஜேம்ஸ் என்பவரின் மகன் வருண் ஓட்டி வந்த Yamaha TN-11-AL 2883 என்ற எண் கொண்ட இரு சக்கர வாகனம் மோதியதில் மேற்கண்ட கோவிந்தராஜ் என்பவருக்கு தலையின் பின்புறம் அடிபட்டதால் சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக தருமபுரி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

இந்நிலையில் மேற்படி நபர் அங்கு மூளைச்சாவு அடைந்த காரணத்தால் 02.10.2023 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் இறந்தார். மேற்படி இறந்த நபரின் உடல் உள்ளுறுப்புகளான இதயம், எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், கல்லீரல், ஓசூர் காவேரி மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் ஒன்று சேலம் மருத்துவக் கல்லூரி மற்றொன்று கோவை மருத்துவக் கல்லூரிக்கும் உறவினர்கள் மூலம் கொடை வழங்கபட்டது.

பின்னர் இன்று காலை (03.10.2023) தருமபுரி அரசு மருத்துவமனையில் 8.மணியளவில் உடல் கூராய்வு செய்து இவரின் உடலானது உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டு இறந்த நபரின் உடலுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து இறந்த நபரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபு, போச்சம்பள்ளி வட்டாட்சியர் மோகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!