சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிரம்

சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிரம்
X
தேன்கனிக்கோட்டை அருகே சுற்றித் திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம். வனப்பணியாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம். தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட, தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தண்டரை ஊராட்சிக்கு உட்பட்ட, இஸ்லாம்பூர் கிராமம் அருகில், சனத்குமார் ஓடைப் பகுதியில் கடந்த மாதம் 28ம் தேதி அப்பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த ஆடுகளை சிறுத்தை ஒன்று தாக்கி, ஒரு ஆட்டினை இழுத்து சென்றதாக தகவல் கிடைக்கப்பெற்றது.

இந்த தகவலின் பேரில், தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் விஜயன், தலைமையிலான வனப்பணியாளர்கள் அடங்கிய குழுவினர், மேற்படி இடத்தை தணிக்கை செய்து, சிறுத்தை நடமாட்டம் இருப்பதற்கான தடயங்கள் கண்டறிந்தனர் .

சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க, தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு, வனச்சரக அலுவலர் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் மற்றும் வன கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் பிரகாஷ், ஆகியோர் இரவு பகலாக தொடர் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுத்தை நடமாட்டம் உள்ள தேன்கனிக்கோட்டை காப்புக்காட்டிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியைச் சுற்றி சாமிபுரம், அடவிசாமிபுரம், அடைகலபுரம், தண்டரை, இஸ்லாம்பூர், பன்டேஸ்வரம், பேலூர், எண்ணேஸ்வரம். பெண்ணங்கூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிரா மங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் உள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பா கவும், எச்சரிக்கையாகவும் இருக்கும்படி வனப்பணி யாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த 4ம் தேதி சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட மேற்படி பகுதியில் ஓசூர் வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர் தலைமையில் தணிக்கை மேற்கொண்டு, டிரோன், தொலைநோக்கி கள் மற்றும் கேமராக்கள் கொண்டு மேற்படி பகுதியை ஆய்வு செய்து, வன கால்நடை உதவி மருத்துவர் ஆலோசனைப்படி கூண்டுகள் வைக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
சத்தியமங்கலத்தில் விசிக ஆர்ப்பாட்டம்...! அமித்ஷாவுக்கு எதிராக கோஷங்கள்..!