மாமனாரின் பாலியல் தொந்தரவு.. கண்டுகொள்ளாத கணவர்.. குழந்தையுடன் இளம்பெண் தர்ணா

மாமனாரின் பாலியல் தொந்தரவு.. கண்டுகொள்ளாத கணவர்.. குழந்தையுடன் இளம்பெண் தர்ணா
X

தனது குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ள விக்னேஸ்வரி.

Krishnagiri News, Krishnagiri News Today: போச்சம்பள்ளி அருகே மாமனாரின் பாலியல் தொல்லையை கண்டுகொள்ளாத கணவரைக் கண்டித்து இளம்பெண் குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

Krishnagiri News, Krishnagiri News Today: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள ஜிங்கள்கதிரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரி(28). இவருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவரது கணவர் திருப்பதி விவசாயம் செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு தற்போது நான்கு வயதில் நிதர்சனா என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே விக்னேஸ்வரியின் மாமனார் பெருமாள் அவருக்கு பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விக்னேஸ்வரி தனது கணவரிடம் பலமுறை தெரிவித்தும் கண்டு கொள்ளாத காரணத்தால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனைத்தொடரந்து, திடீரென்று நேற்று முன்தினம் விக்னேஸ்வரியை வீட்டை விட்டு வெளியேற்றிய அவரது கணவர் திருப்பதி வீட்டைப் பூட்டிச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து விக்னேஸ்வரி போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் தனது மாமனார் மற்றும் கணவர் வீட்டைவிட்டு வெளியேற்றிய சம்பவம் குறித்து ஊர்த் தலைவர்களிடம் விக்னேஸ்வரி தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது வீட்டின் முன்பே தனது நான்கு வயது மகளோடு நிதர்சனா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று மாலை 3 மணியிலிருந்து தொடர்ந்து பூட்டிய வீட்டின் முன் இருந்து தர்ணா போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக நிதர்சனாவின் மாமனார், மாமியார், கணவர் ஆகிய மூன்று பேரும் வீட்டைப் பூட்டிவிட்டு அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கொட்டகையில் குடியிருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது உரிமைக்காகப் பெண் ஒருவர் தனது 4 வயதுக் குழந்தையுடன் தனது கணவரின் வீட்டின் முன்பு போராடி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஊர் தலைவரும், காவல் நிலையமும் கணவருக்கு சாதகமாக செயல்படுகிறதா என்று அந்தப்பகுதி பெண்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நான்கு வயது பெண் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அன்னையர் தினமான இன்று ஒரு பெண் போராடி வருவது வேதனைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அந்த பெண்ணுக்கு விடிவு கிடைக்குமா..?

Tags

Next Story
மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்