விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய விவசாயிகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய விவசாயிகள்
X

விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

போச்சம்பள்ளி வாரச்சந்தையில் குப்பைகள் நிறைந்து சுகாதார சீர்கேடாக உள்ளது. மனு அளித்தாலும், பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதில்லை என புகார்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் சரயு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசியதாவது:-

போச்சம்பள்ளியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம், கூட்டுறவு மூலம் இ-நாம் முறையில் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் விலை நிர்ணயம் செய்வதில் வெளிப்படை தன்மை இல்லை. போச்சம்பள்ளி வாரச்சந்தையில் குப்பைகள் நிறைந்து சுகாதார சீர்கேடாக உள்ளது.

இது தொடர்பாக பலமுறை புகாரளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

வேலம்பட்டி ஏரி, பாளேகுளி ஏரி, பில்லுமலை அடிவாரத்தில் இருந்து தென்பெண்ணை ஆறு செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை, அளவீடு செய்து அகற்றிட வேண்டும். கோமாரி நோய் தாக்கி இறந்த காளை மாடுகளுக்கு இழப்பீடு வழங்க, அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

குருபரப்பள்ளி, வேப்பனப்பள்ளி பகுதியில் தனிப்பட்டா கேட்டு விண்ணப்பம் செய்தால், வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

நேரலகிரி ஏரியை அளவீடு செய்ய மனு அளித்தால், நடவடிக்கை எடுக்காமல் தீர்வு காணப்பட்டதாக பதிலளிக்கின்றனர். அலியாளம், பாத்தகோட்டா வழியாக தென்பெண்ணை உபரிநீர் தூள்செட்டி ஏரிக்கு கொண்டு செல் லும் வகையில் கால்வாய் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. தற்போது பணிகள் முடிக்கப்பட்ட வரை உள்ள கிராமங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும்.

கார்த்திகை பட்டா சாகுபடிக்காக நாட்டுரக தக்காளி, மிளகாய், கத்திரிக்காய் நாற்றுகள் வழங்க வேண்டும். குறைதீர் கூட்டத்தில் தொடர் மனு அளித்தாலும், பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதில்லை என்று கூறினார்கள்.

தொடர்ந்து ஆட்சியர் சரயு பேசுகையில், போச்சம்பள்ளி வாரச் சந்தை தூய்மைப்படுத்தி, அதற்கான புகைப்படங்களை அனுப்பி வைக்க தொ டர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காளை மாடுகள் வாங்க விவசாயிகளுக்கு மானியத்துடன் கடனுதவிகள் அளிக்கப்படுகிறது. மேலும், பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு பால் வழங்க முன்வர வேண்டும்.

கொரோனா காலக்கட் டத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பாலை கொள்முதல் செய்ய மறுத்தும், விலையும் குறைத்த போதும், ஆவின் நிர்வாகம் பாலை கொள்முதல் நிலையான விலை கொடுத்தது.

மாவட்டத்தில் புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்படும். மேலும், ஆவின் வளர்ச்சிக்கு பால் உற்பத்தியாளர்கள் உதவிட வேண்டும்

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றிட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கோமாரி நோய் தாக்கிய உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு முன்மொ ழிவு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்