கூட்டுறவு துறையில் காலியாக உள்ள 58 பணியிடங்களுக்கு நேரடி நியமனம்
பைல் படம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு துறையில் காலியாக உள்ள 58 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்ப டவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தி யாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், தொடக்கவேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் காலியாக உள்ள, 58 உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது
இத்தேர்வுக்கு http://www.drbkrishnagiri.net என்ற இணையதளம் வழியாக வருகிற டிசம்பர் 1ம் வரை விண்ணப்பிக்கலாம், வருகிற டிசம்பர் 24ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்கு பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சியோ, அங்கீகரிக்க ப்பட்ட பல்கலைக்கழகத்தில் கூட்டுறவு முதுநிலை பட்டப்படிப்பு படித்த வர்களும் விண்ணப்பி க்கலாம்.
கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ள வர்களும் இப்பணிக்கு உரிய சான்று, கட்டண விவரங்களுடன் இணை யத்தில் விண்ணப்பிக்கலாம்.
முற்பட்ட வகுப்பி னருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. எழுத்துத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்ப டையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இது தொடர்பான விரிவான விவரங்கள் http://www.drbkrishnagiri.net என்ற கிருஷ்ணகிரி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் வெளியி டப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu