காவேரிப்பட்டணம் அருகே குப்பைக்கிடங்காக மாறி வரும் மயானம் , நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காவேரிப்பட்டணம் அருகே குப்பைக்கிடங்காக மாறி வரும் மயானம் , நடவடிக்கை எடுக்க கோரிக்கை
X

மயானத்தில் காட்டப்பட்டுள்ள கழிவுகள் 

காவேரிப்பட்டணம் அருகே குப்பைக்கிடங்காக மயானம் மாறி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் எர்ரஅள்ளி ஊராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை அருகே மயானம் உள்ளது. இந்த மயான பகுதியில் தான் தகனமும் நடைபெற்று வருகிறது.

ஆனால் தற்போது அந்த மயான பகுதியில், பொதுமக்கள் குப்பைகளையும், மதுபான பாட்டில்களையும், கோழி கழிவுகளையும் கொண்டு வந்து கொட்டி தீ வைத்து விட்டு செல்கின்றனர். மேலும் சாலை ஓரங்களில் மாம்பழம் உள்ளிட்ட அழுகிய பழ வகைகளை கொட்டி அசுத்தப்படுத்தி வருகின்றனர்.

இதனால் சாலையில் செல்லும் பொது மக்களுக்கும், அப்பகுதியில் வசித்து வரும் குடியிருப்பு வாசிகளுக்கும் கோழிக்கழிவு மற்றும் அழுகிய பழங்களின் துர்நாற்றத்ம் மற்றும் புகையினால் ஏற்படும் மாசு ஆகியவற்றால் நுரையீரல் தொற்று பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஒரு மனிதன் இறந்த பின்பு எரிக்கக்கூடிய மயான பகுதியில் இது போன்ற சுகாதார சீர்கேட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே இது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மயானத்தில் பிணங்களை தகனம் செய்ய மட்டுமே பயன்படுத்தவும், அங்கு குப்பைகள் உள்ளிட்ட கழிவு பொருட்களை எரிப்பதை தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil