காவேரிப்பட்டிணம் அருகே இலவச ஆங்கில செயல்வழி கல்வியை துவக்கி வைத்த ஆட்சியர்
இலவச ஆங்கில செயல்வழி கல்வியை துவக்கி வைத்த ஆட்சியர் கே.எம்.சரயு.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஒன்றியம், திம்மாபுரம் ஊராட்சி தேர்பட்டி மற்றும் சுண்டேகுப்பம் ஊராட்சி, மணி நகர் ஆகிய கிராமங்களில் அமீகா அறக்கட்டளை சார்பாக, புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு திறந்து வைத்து, அமீகா அறக்கட்டளையின் இலவச ஆங்கில செயல்வழி கல்வியை துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தெரிவித்ததாவது:
அமீகா அறக்கட்டளை (Amyga Foundation, website:www.amyga.org) ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் (ICDS), பள்ளிக்கல்வி துறையுடன் இணைந்து இந்தியா முழுவதும் 2 புதிய கட்டிடங்களை கட்டியும், 14 அங்கன்வாடி மைய கட்டிடங்களை புதுப்பித்தும் அதில் இந்தியா முழுவதும் 450 -க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அதில் தமிழ்நாட்டில் மட்டும் 250- க்கும் மேற்பட்ட குழந்தைகளும் இலவச ஆங்கில செயல்வழி கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும், காவேரிப்பட்டிணம் ஒன்றியத்திற்குட்பட்ட, தேர்பட்டி, மணி நகர் குழந்தைகள் பயனடையும் வகையில் அமீகா அறக்கட்டளை இன்டர் பம்ப் குழுமத்தின் வாழ்வாயில் புளூயட் பவர் இந்தியா பிரைவேட் லிமிடெட் (WALVOIL FLUID POWER INDIA PVT LTD) நிறுவனத்துடன் இணைந்து சொந்தமான கல்வி உபகரணங்களை பயன்படுத்தியும், ஆங்கில வழி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்தும் கல்வி சேவையை தொடர உள்ளனர்.
இத்திட்டத்தில் கடந்த ஆண்டு அமீகா அறக்கட்டளை மூலம் கற்ற மாணவர்களின் கற்றல் திறனை கண்டு பெற்றோர்களிடமிருந்து மிகுந்த வரவேற்பு பெற்று உள்ளது. இதன் மூலம் கிராமப் பகுதி மாணவர்களும் தரமான கட்டிட வசதியுடன் ஆங்கில வழிக் கல்வியை இலவசமாக பெரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேர்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், வளரிளம் பருவத்திற்கான சிறப்பு மருத்துவ முகாமில் மாணவ, மாணவியர்களின் எடை, உயரம், இரத்த அளவு, பொது மருத்துவம், கண் சிகிச்சை, பல் சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை பணிகளை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.ஜெயந்தி, வட்டார கல்வி அலுவலர்கள் வெங்கடேசன், தாசூன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்சுப்ரமணி, செந்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திக், பாரதி, தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் சத்தியமூர்த்தி, மருத்துவர்கள் சண்முகம், இவாஞ்சலின், அமீகா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்கள் லட்சுமி ராமமூர்த்தி, தர்மராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் துர்காதேவி, திம்மாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu