வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை ஆய்வு செய்யும் ஆட்சியர் சரயு
கிருஷ்ணகிரி தாலுகா வேப்பனபள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்கு சாவடி எண்.3 மற்றும் பி.கே.பெத்தனப் பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் வாக்கு சாவடி எண்.7, 8 ஆகிய வாக்கு சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் 2024 சிறப்பு சுருக்கத் திருத்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சரயு நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் இது குறித்து அவர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் 2024 சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் நடைபெற்று வருகிறது. 1.1.2024 தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்து, இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1090 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இன்று அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடை பெறுகிறது. வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்க ளுக்கு நேரடியாக சென்று படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். மேலும், வாக்காளர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் https://voters.eci.gov.in என்ற இணையதள முகவரியில், Apply Online/Correction of entries மூலமும், தங்கள் கைப்பேசியில் Voters Helpline App என்ற செயலியை பதிவி றக்கம் செய்தும் விண்ணப் பிக்கலாம்.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் இலவச கட்டணமில்லா தொலைபேசி எண்.04343-1950 என்ற எண்ணில் அழைத்து, தங்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் பெறலாம். கிருஷ்ணகிரி மாவட்ட இணையதள முகவரியான https://krishnagiri.nic.in மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
எனவே, பொதுமக்கள் அவர்கள் வாக்களிக்கும் வாக்கு சாவடிகளுக்கு நேரடியாக சென்று படிவங்களை பூர்த்தி செய்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இந்த சிறப்பு சுருக்க முறை திருத்த முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu