மத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு
ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் தையல் சிறிய அளவிலான தொழில் தொகுப்பு (Mini Cluster) தொழில் துவக்க விழாவினை மாவட்ட ஆட்சியர் சரயு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
மத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், காரப்பட்டு ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) வட்டார இயக்க மேலாண்மை அலகு கீழ் செயல்படும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் தையல் சிறிய அளவிலான தொழில் தொகுப்பு (Mini Cluster) தொழில் துவக்க விழாவினை மாவட்ட ஆட்சியர் சரயு குத்து விளக்கு ஏற்றி வைத்து, துவக்கி வைத்தார்கள்.
இந்த தொழில் குழுவில் 30 சுய உதவி குழு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து அவர்களது சொந்த பங்களிப்பு ரூ.41,000 மற்றும் திட்ட நிதி ரூ.2 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 8 தையல் இயந்திரங்கள் வாங்கி தொழில் துவங்கி உள்ளனர்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், சாலை பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ், ரூ.4 இலட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் சிவம்பட்டியிலிருந்து எகிலேரியான்கொட்டாய் கிராமம் வரை சாலையின் இருபுறமும் தடுப்புசுவர் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், சிவம்பட்டி ஊராட்சியில் கனிச்சி கிராமத்தில் சாலை பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ், ரூ.4 இலட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் சாலையின் இருபுறமும் தடுப்புசுவர் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், வாணிப்பட்டி ஊராட்சியில், ஆனந்தூர் பாரதமேடு முதல் அம்மன் கோவில் பதி வரை ரூ.88 ஆயிரம் மதிப்பில் சாலையின் இருபுறமும் தடுப்புசுவர் அமைக்கப்பட்டு வரும் பணிகள் என மொத்தம் ரூ.10 இலட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில், மகளிர் திட்ட அலுவலர் ஜாகீர் உசேன், உதவி திட்ட அலுவலர்கள் பெருமாள், ஜெயக்கொடி, மாவட்ட வள நபர் ரினால்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்குமரன், துரைசாமி, ஒன்றிய பொறியாளர்கள் பூம்பாவை, ஜமுனா, ஊராட்சி மன்ற தலைவர் ரமாதேவி, மகளிர் திட்ட பணியாளர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu