கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு
X

 முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் பணிகளை ஆய்வு செய்யும் ஆட்சியர் 

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2 கோடி மதிப்பில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் சரயு நேரில் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கல்லுக்குறுக்கி, பெரியகோட்டப்பள்ளி, மேகலசின்னம்பள்ளி, நாரலப்பள்ளி, தேவச முத்திரம் ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக ரூ.2 கோடியே 2 லட்சத்து 59 ஆயிரத்து 600 மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கல்லுகுறுக்கி கிராமத்தில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பி.ஜி.புதூர் சாலை முதல் கல்லுக்குறுக்கி வரை 350 மீட்டர் தூரத்திற்கு ரூ.11 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலை அமைக்கும் பணிக ளையும், பெரியகோட்டப் பள்ளி ஊராட்சி, போத்திநாயனப்பள்ளி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொகுதி - 2 -ன் கீழ், ரூ.14 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட கட்டுமான பணிகளை ஆட்சியர் பார்வையிட்டார்.

மேலும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சமைக்கப்பட்ட உணவுகள் மற்றும் சமையல் பொருட்களின் இருப்புகளை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் சமைக்கப்பட்ட உணவு மாதிரிகளை பார்வையிட்டு, வழங்கப்படும் உணவுகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும மாணவ, மாணவிகளிடம் கணித வாய்ப்பாடு, ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்கள் வாசிப்பு, எழுத்து திறன்களை ஆய்வு செய்தார்.

இதே போல பெரிய கோட்டப்பள்ளி ஊராட்சியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், கழிவுநீர் கால்வாய், சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு பணிகள், அங்கன்வாடி மைய சமையல் கூடங்கள் ஆகியவற்றை ஆட்சியர் பார்வையிட்டார்.

மேலும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணிகள், கதிரடிக்கும் களம் கட்டுமான பணிகள், மாதிநாயனப் பள்ளியில் 7 இருளர் இன மக்களுக்கு புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டு பணிகள் ஆகியவற்றையும் ஆட்சியர் பார்வையிட்டார்.

இதே போல நாரலப்பள்ளி, மேகலசின்னம்பள்ளி, தேவசமுத்திரம் ஊராட்சிகளில் பணிகளை பார்வையிட்ட ஆட்சியர், பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வுகளின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ராஜேஷ், உதவி பொறியாளர்கள் அன்புமணி, சத்யநாராய ணராவ், அந்தோணி ஆசைதம்பி, பணி மேற்பார்வையாளர்கள் கல்பனா, அம்பிகா, நாகூர் மீரான், செந்தில், தொழில்நுட்ப உதவியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!