தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற மாணவனுக்கு ஆட்சியர் பாராட்டு

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற மாணவனுக்கு ஆட்சியர் பாராட்டு
X

மாற்றுத்திறனாளி மாணவன் எம்.மகேஷ் என்பவரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் வி. ஜெயசந்திர பானுரெட்டி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

தேசிய அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் தங்க பதக்கம் வென்ற மாணவனை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம், கோடிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவன் எம்.மகேஷ் (வயது 23) மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி பெற்ற பல்வேறு நீச்சல் போட்டியில் பங்கு பெற்று வந்தார்.

இதனைத்தொடர்ந்து, கடந்த 02.03.2022 அன்று சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியில் பங்கு பெற்று மாநில அளவில் தங்க பதக்கம் பெற்றார்.

தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற தகுதி பெற்று 24.03.2022 முதல் 27.04.2022 வரை ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நாராயன் சேவா சன்ஸ்தான் அரங்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியில் தமிழ்நாடு சார்பாக பங்கு பெற்று தேசிய அளவில் தங்க பதக்கம் வென்றார்.

தங்கம் வென்ற எம்.மகேஷ் என்ற மாற்றுத்திறனாளி மாணவனை பாராட்டி, தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றி பெற மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ். உமாசங்கர், நீச்சல் பயிற்சியாளர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!