கிருஷ்ணகிரி அணையில் மூழ்கி பெங்களூர் இளைஞர் சாவு

கிருஷ்ணகிரி அணையில் மூழ்கி பெங்களூர் இளைஞர் சாவு
X

மூழ்கிய உடலை தேடும் பணியில் போலீசார்.

கிருஷ்ணகிரி அணையில் மூழ்கி பெங்களூர் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரு, கே.ஜி.அள்ளியைச் சேர்ந்த சத்தியமூர்த்தியின் மகன் காளிதாஸ் (34). இவர் தனது நண்பர்களுடன் கிருஷ்ணகிரி அணைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார்.

காளிதாஸ் தனது நண்பர்களுடன் அணையின் நீர்தேக்க பகுதியான பழைய பேயனப்பள்ளி அருகே குளித்துக் கொண்டிருந்தார். நீச்சல் தெரியாத இவர், ஆழமான பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கி உயிருக்குப் போராடினார்.

அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர். நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று நீரில் மூழ்கிய காளிதாஸை உயிருடன் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரத் தேடலுக்குப் பிறகு, காளிதாஸை சடலமாக மீட்டு, போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி அணை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!