கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்பு
X

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழியை ஆட்சியர் தலைமையில் ஏற்றுக்கொண்டனர்.

அக்டோபர் 30 முதல் நவம்பர் 5 வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிப்பதையொட்டி, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் (Vigilance Awareness Week) அக்டோபர் 30 முதல் நவம்பர் 5 வரை அனைத்து அரசு அலுவலகங்களில் கடைபிடிப்பதையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தலைமையில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழியை அனைத்து அரசு துறை அலுவலர்கள் இன்று (30.10.2023) எடுத்துக்கொண்டனர்.

இந்த ஆண்டின் கண்காணிப்பு விழிப்புணர்வு வார அரசின் கருப்பொருளாக "Say no to Corruption; Commit to the Nation” என்ற நோக்கில் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதி மொழி:

நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன்.

அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நம்புகிறேன்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன்

எனவே, நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும்,

• இலஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும்,

• அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும்,

•பொதுமக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன் என்றும்,

• தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாகச் செயல்படுவேன் என்றும்,

ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன் என அனைத்து துறை அலுவலர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், தனித்துணை ஆட்சியர் பன்னீர்செல்வம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் டி.ரமேஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) பி.ராஜகோபால், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை நல அலுவலர் கே.விஜயலட்சுமி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!