கிருஷ்ணகிரியில் கூடுதல் வகுப்பறை கட்டிடப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானப்பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கே.எம்.சரயு.
நபார்டு திட்டத்தின் கீழ் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.37 கோடியே 71 இலட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் 165 கூடுதல் வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) சார்பாக நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 65 இலட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் 22 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுமான பணிகள், குந்தாரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.1 கோடியே 69 இலட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் 8 வகுப்பறைகள் கட்டுமான பணிகள், குருப்பரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ. 1 கோடியே 70 இலட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் 8 வகுப்பறைகள் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு இன்று (28.12.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கும் போது:
பள்ளிகல்வித்துறை சார்பாக பல்வேறு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், பள்ளி சுற்றுச்சுவர், கழிப்பறை வசதிகள், சுகாதாரமான குடிநீர் வசதி போன்ற கட்டமைப்புகளை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ரூ.5 கோடியே 92 இலட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் 36 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்கள்.
தற்போது அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் கிருஷ்ணகிரி அணை, மோரனஹள்ளி, ராமாபுரம், நெடுங்கல், ஆலப்பட்டி, மல்லப்பாடி, கப்பல்வாடி, கிருஷ்ணகிரி, குருப்பரப்பள்ளி, குந்தராப்பள்ளி, அட்டக்குறுக்கை, காட்டிநாயகண்ணதொட்டி, ஏனுசோனை, நாட்ராம்பாளையம், பெத்தபேலுக்கொண்டப்பள்ளி, மூக்காண்டப்பள்ளி, அஞ்செட்டி, சிங்காரப்பேட்டை, குன்னத்துார், மிட்டப்பள்ளி, நாகரசம்பட்டி, பாலதொட்டனப்பள்ளி, நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 37 கோடியே 71 இலட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் 165 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதேப்போல கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள், மற்றும் காலை உணவு திட்டத்தின் கீழ் சமையலறை கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்தார்.
இவ்வாய்வின் போது பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) செயற்பொறியாளர் சாமிநாதன், உதவி பொறியாளர் அருள் மற்றும் ஆசிரியர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu