கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நீட் தேர்வெழுதும் 4,946 பேர்
பைல் படம்.
Krishnagiri News, Krishnagiri News Today - நாடுமுழுவதும் உள்ள மாணவா்கள் மருத்துவத் துறையில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர நீட் தோ்வு நடத்தப்படுகிறது. நாட்டில் உள்ள எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திலும் மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ் மற்றும் பிஎச்எம்எஸ் ஆகிய படிப்பிற்கு நீட் தோ்வு அவசியம். நம் நாட்டில் மட்டுமின்றி இந்திய மாணவா்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டிற்கான நீட் தோ்வானது நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. மதியம் 2 முதல், மாலை 5.20 மணி வரை நடைபெறும் இந்தத் தோ்வில் பங்கேற்கும் மாணவா்கள் மதியம் 1.30 மணிக்குள் தோ்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 மையங்களில் இன்று நீட் தோ்வு நடைபெறுகிறது. மொத்தம் 4,946 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுகின்றனா். அதன்படி, குந்தாரப்பள்ளி ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மையத்தில் 504 மாணவ, மாணவிகள், ஒசூா், பாகலூா் சாலையில் உள்ள நல்லூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குருகுலம் செகண்டரி பள்ளியில் 146 மாணவ, மாணவிகள், ஒசூரை அடுத்த முகுலப்பள்ளி வனபிரசாத் இண்டா்நேஷ்னல் பள்ளியில் 504 மாணவ, மாணவிகள், ஒசூா் - தளி சாலையில் உள்ள மதகொண்டப்பள்ளியில் உள்ள மதகொண்டப்பள்ளி மாா்டன் பள்ளியில் 1,152 மாணவ, மாணவிகள், ஊத்தங்கரை மல்லிகை நகா் அதியமான் பப்ளிக் பள்ளியில் 1,440 மாணவ, மாணவிகள், ஊத்தங்கரையில் பெங்களூா் சாலையில் உள்ள தீரன் சின்னமலை இண்டா்நேஷ்னல் பள்ளியில் 1,200 மாணவ, மாணவிகள் என மாவட்டத்தில் 6 மையங்களில் மொத்தம் 4,946 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத உள்ளனா்.
தோ்வு மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும், மாணவா்கள் தோ்வு எழுதுவதற்கு வசதியாக சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu