கிருஷ்ணகிரி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 344 மனுக்கள் அளிப்பு

கிருஷ்ணகிரி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்   344 மனுக்கள் அளிப்பு
X

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்றமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (30.10.2023) நடைபெற்றது.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம், வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 344 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, தலா ரூ.7,900 வீதம் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.23 ஆயிரத்து 700 மதிப்பில் சக்கர நாற்காலிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், தனித்துனை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீர்செல்வம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் டி.ரமேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பர்கூர் வட்டத்தை சார்ந்த பட்டாதாரர்கள் நத்தம் தொடர்பான பரிமாற்றங்களை பொது சேவை மையம் (சி.எஸ்.சி Centre) மூலம் மனு செய்து நத்தம் தொடர்பான பட்டா மாறுதல் ஆணைகளை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

சென்னை நில நிர்வாக ஆணையர் மற்றும் இயக்குநர் நில அளவை / நிலவரித் திட்டம் அவர்களின் உத்திரவின் படி, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டத்தின் நத்தம் நில அளவை ஆவணங்கணை இணையவழிச் சேவைக்கு கொண்டு வரும் பணிகள் முடிவுற்றுள்ளது. எனவே பர்கூர் வட்டத்தை சார்ந்த பட்டாதாரர்கள் பயன் பெறும் வகையில் இனிவரும் காலங்களில் நத்தம் தொடர்பான பரிமாற்றங்களை பொது சேவை மையம் (சி.எஸ்.சி Centre ) மூலம் மனு செய்து நத்தம் தொடர்பான பட்டா மாறுதல் ஆணைகளை பெற்றுக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business